

கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல குருக்கள்
அய்யம்பாளையம் ஸ்ரீமது இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள் திருமடத்திற்கு கட்டுப்பட்ட சிஷ்யர்களின் காணி கோத்திரங்கள்
காணிகள் - கோத்திரங்கள் :
1. கருமாபுரம் பொருளந்தை கோத்திரம்
2. ஏழூர் பொருளந்தை கோத்திரம்
3. மாமுண்டி -1.பொருளந்தை கோத்திரம்
- 2.அடற கோத்திரம்
4. ஈஞ்சப்பள்ளி - பொருளந்தை கோத்திரம்
5. குமாரமங்கலம் - தூரன் கோத்திரம்
6. பாலமேடு - தூரன் கோத்திரம்
7. தும்பங்குறிச்சி - தூரன் கோத்திரம்
8. அணிமூர் - தூரன் கோத்திரம்
9. வெங்கம்பூர் - தூரன் கோத்திரம்
10. மொடக்குறிச்சி - 1. தூரன் கோத்திரம்
- 2. பனங்காடை கோத்திரம்
- 3. காரி கோத்திரம்
11. ஊத்துக்குளி - வண்ணக்கன் கோத்திரம்
12. கொளாநல்லி - 1. கண்ணன் கோத்திரம்
- 2. கொளாயன் கோத்திரம்
13.பெரியமணலி - செம்பன் கோத்திரம்
14. மோடமங்கலம் - 1. செம்பன் கோத்திரம்
- 2. அந்துவன் கோத்திரம்
15. ராமதேவம் - 1. செம்பன் கோத்திரம்
- 2. காடை கோத்திரம்
16. தோக்கவாடி - காடை கோத்திரம்
17. தேவனாங்குறிச்சி - காடை கோத்திரம்
18. ஆனங்கூர் - 1. பனங்காடை கோத்திரம்
- 2. கண்ணன் கோத்திரம்
19. ஏமப்பள்ளி - காடை கோத்திரம்
20. தோக்கவாடி - வெண்டுவன் கோத்திரம்
21.நாட்டார்மங்கலம் - கன்ன கோத்திரம்
22. கொளாரம் - காடை கோத்திரம்
23. மணியனூர் - கண்ணன் கோத்திரம்
24. மங்கலம் - காடை கோத்திரம்
25. கொன்னையாறு - 1. செல்லன் கோத்திரம்
- 2. பனங்காடை கோத்திரம்
26. இருப்புலி - செல்லன் கோத்திரம்
27. கொக்களை - செல்லன் கோத்திரம்
28. கூத்தம்பாடி - 1. ஆந்தை கோத்திரம்
- 2. செம்பூத்தன் கோத்திரம்
- 3.பனங்காடை கோத்திரம்
29. கூனவேலம்பட்டி - செம்பூத்தன் கோத்திரம்
30. முறங்கம் - ஆந்தை கோத்திரம்
31. கருதாணி - ஆந்தை கோத்திரம்
32. பெருங்குறிச்சி - தோ்வேந்தா் கோத்திரம்
33. மொஞ்சனூர் - தோ்வேந்தா் கோத்திரம்
34. வண்டிநத்தம் - கண்ணன் கோத்திரம்
35. இருக்கூர் - குள்ளன்(?) கோத்திரம்
36. வீரகுட்டை - வெண்டுவன் கோத்திரம்
37. தகடப்பாடி - 1. கண்ணன் கோத்திரம்
- 2. புள்ளன் கோத்திரம்
38.படைவீடு - மேதனி கோத்திரம்
39. மரப்பறை - செம்பூத்தான் கோத்திரம்
40. மோரூர் கண்ணன் கோத்திரம் பெரியவகை
நாட்டுக்கவுண்டர் மற்றும் மேற்படி கன்னன் கோத்திரம்
41. வெண்ணந்தூர் - காடை கோத்திரம், சேலம் நாட்டுக்கவுண்டர்கள்
42. மல்லசமுத்திரம் - விழியன் கோத்திரம்
43.ஏழூர் – பண்ணை கோத்திரம்
44.உஞ்சனை - காரி கோத்திரம்
45.பட்டுலூர் - 1.தூரங் கோத்திரம்
- 2.பொன்ன கோத்திரம்
- 3.முத்தண கோத்திரம்
46.சித்தம்பூண்டி - கன்னங் கோத்திரம்
47.மண்டபத்தூர் - கன்னன் கோத்திரம்
48.பில்லூர் - காடை கோத்திரம்
49.பாலமேடு - அந்துவன் கோத்திரம்
50.இளம்பிள்ளை - காடை கோத்திரம்
51.தாழைக்கரை - வெண்டுவன் கோத்திரம்
52.மாவுரட்டி - காடை கோத்திரம்
53.கூடலூர் - பயிர கோத்திரம்
54.அலிங்கத்து - தூர கோத்திரம்
55.குமாரமங்கலம் - ஈஞ்ச கோத்திரம்
56.மோளிப்பள்ளி - செங்கனி கோத்திரம்
57.கலியாணி - தூரங் கோத்திரம்
58.ஸ்திரி கணக்குபிள்ளைகள் சிஷ்யர்கள்
- 1.கெளடின்ய கோத்திரம்
-2.காசிப கோத்திரம்
59.கொங்கு குலால சிஷ்யர்கள்
-1.மோரூர் நாட்டு குயவர் பவானி பட்டாக்காரர் வகையாராக்கள்
-2.பருத்திபள்ளி நாட்டு குயவர்
60.ஆதிசைவர்
-1.கெளன்டிய கோத்திரம்
-2.காசிப கோத்திரம்
-3.கெளசிக கோத்திரம்
61.கொங்க முதலியார்
-1.கொங்கு கைகோளர்முதலி வகையறாக்கள்
-2.சேலத்து நாடுகிழக்கத்தி முதலி வகையறாக்கள்
62.சோழிய வெள்ளாள பிள்ளை - கஞ்சமலைபாருபத்தியம்
( ஏரணாபுரத்தில் இருக்கிறார்கள் )
-1.குடியின கோத்திரம்
-2.கோயங் கோத்திரம்
(கவுண்டர்களின் பல்வேறு ஜாதி உட்பிரிவுகள் இங்கே ஒன்றாக மட ஆவணங்களின் படி கூறப்பட்டுள்ளது. கல்யாண காரியங்களுக்கு அவரவர் உறவின் முறையில் விசாரித்து உறுதி செய்து கொள்ளவும்.)
மடத்தையும் குருஸ்வாமி அவர்களையும் குறிப்பிட்டு-மேற்கோள் காட்டி எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்களில் சில,
சேலம், மெட்ராஸ் ஜில்லா கேஜட்டியர்கள், வால்யூம் 1,பகுதி-1,1918,பக்கம்-145
'ஒவ்வொரு நாடும் அதன் பிராமண குருவை கொண்டிருக்கும். மோரூர், மௌசி நாடுகளின் குரு, குருக்கள் என்னும் ஜாதி பிாிவை சேர்ந்தவர், கோயம்புத்தூாின் காங்கயம் நாட்டில் நத்தக்காடையூாில் வசிக்கிறார். மல்லசமுத்திரம் மற்றும் பருத்திப்பள்ளி நாடுகளின் குருமார்களும் குருக்கள் ஜாதியை சேர்ந்தவர்கள். முந்தைய நாட்டின் குரு, பரமத்தி டிவிசன் அய்யம்பாளையத்தில் வசிக்கிறார் அவரது பட்டம் இம்முடி சித்தம்பல நயினார், மற்றும் பிந்தைய நாட்டின் குரு சேலம் தாலுக்கா கல்லங்குளத்தில் வசிக்கிறார். ராசிபுர நாட்டின் குரு ஒரு தீசஷிதர் அவர் ஈரோடு தாலுக்கா பாசூாில் வசிக்கிறார்.
தோ்வேந்தா் கோத்திரத்தார் தாமிர சாசனம்:
குமரமங்கலம், பொன்குறிச்சி, மொஞ்சனூர், கீரனூர், வேலம்பூண்டி, கூத்தனூர், வாங்கல் ஆகிய காணிளைச் சேர்ந்த கோத்திரத்தார் ஆதி காணியான குமரமங்கலம் பொன்காளியம்மன் கோயிலில் கலி 4885 (1784 கிறிஸ்தவ) வருடம் கூடி குமரமங்கலம் மலைபட்டன் பேத்தி முத்துவாழியை தேவேந்திர கோத்திர மாணிக்கியாக நியமிக்கின்றனர்.
"இத்தியாதி தேவதைகளுடைய கிருபையும் இம்முடி சிற்றம்பல சாமியார் கடாட்சத்துனாலேயும்............................................."
சிஷ்யர்கள் கடமைகள்
1. குலகுருக்கள் ஆசீர்வாதம் குடும்ப்துக்கும் வம்சத்துக்கும் மிகவும் நல்லது. வருஷமொருமுறையேனும் குருஸ்வாமியை தரிசித்து ஆசி பெறுதல் வேண்டும்.
2. மங்கள வாழ்த்தில் கூறியுள்ளபடி, கல்யாண பத்திாிக்கைகளை காணியாச்சி கோயில்களுக்கு வைப்பது போல தவறாது குலகுருக்களுக்கும் வைத்து அழைக்க வேண்டும்.
3. சிஷ்யர்களின் காணியாச்சி கோயில், உாிமை கோயில்கள் விசேஷங்களுக்கு பாரம்பரிய முறைப்படி குலகுருக்களை முன்னிறுத்தி செய்விக்க வேண்டும்.
4. மடத்தின் அன்றாட ஆத்மார்த்த பூஜைகளுக்கு அவசியமான தேங்காய், பழம், எண்ணெய், பச்சாிசி, நாட்டுச்சர்க்கரை, நாட்டுப்பசும்பால், நாட்டுப்பசுநெய், சாம்பிராணி போன்ற பூஜைப் பொருட்களை வழங்க வேண்டும்.
5. தெய்வ சாநித்யமும், சாஸ்திர ஞானமும் பெற்ற குருஸ்வாமிகள் வசம் ஆன்மீக வழிகாட்டல்களுக்கும், மனம் சஞ்சலமான காலங்களில் அவசியமான ஆலோசனைகளுக்கும் குலகுருக்களிடம்; உபதேசம் பெற்று மனம் தெளிவுறலாம்.
6. வருஷம் ஒருமுறையேனும் தவறாது குருஸ்வாமிகளை தத்தமு கிராமங்களுக்கோ, கோயில்களுக்கோ சஞ்சாரம் செய்ய வரவேற்று பூஜைகள் செய்வித்து, உபதேசங்கள் கேட்டு, சஞ்சார காணிக்கை செலுத்த வேண்டும். மடத்திற்கான தலைக்கட்டு வாியை தவறாது செலுத்துதல் வேண்டும். மடத்திலும் சாி, சஞ்சாரத்தின் போதும் சாி தீபாராதனை தட்டில் பணம் போடுவது கூடாது. வழிபாட்டின் பின் நாம் மடத்திற்கு செலுத்தவேண்டிய காணிக்கை மற்றும் வரியை தேங்காய் பழத்துடன் வைத்துக்கொடுக்க வேண்டும்.
மடத்தில் தினசரி காலை 7.30 மணியளவில் ஆத்மார்த்த பூஜை நடைபெறும். அதுசமயம் சிஷ்யர்கள் கலந்துகொள்வது மிக சிறப்பு. வருடம் ஓரிரு முறையேனும் குரு தரிசனம் செய்வது மிகவும் நல்லது.
மடத்தின் முகவரி
மடம் திருச்செங்கோடு அருகே அருணகிரி சுள்ளிபாளையத்தில் உள்ள அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் தாண்டி அருணகிரி அய்யம்பாளையத்தில் உள்ளது
முகவரி :
சிதம்பரம் குருக்கள்,
அருணகிரி அய்யம்பாளையம்,
கந்தம்பாளையம் (வழி) ,
திருச்செங்கோடு,
நாமக்கல் (DT).
Mob: 94428 63234
98655 44941
http://ayyampalayammatam.blogspot.in/