konguthervandhar
கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

அய்யம்பாளையம் இம்முடி சிற்றம்பல


குருஸ்வாமிகள் திருமட வரலாறு



குருமடத்தின் வரலாறு (கர்ணபரம்பரையாக)


கொங்கதேசத்தின் மடங்களில் மிகப் பழமையான மடங்களில் ஒன்று. மிகப்பொிய அளவு சிஷ்யர்களைக் கொண்ட மடமும் கூட. இம்மடம் ஒரு கிரகஸ்தமடம். மடத்தில் குருஸ்வாமியானவர் குருமாதாவுடன் இல்லறத்தில் இருந்து தம்பதிசமேதராய் சிஷ்யபரிபாலனம் செய்கிறார். ஒவ்வொரு தலைமுறையிலும் பட்டத்து குருஸ்வாமிகளின் மூத்த (ஜேஷ்ட) மகன் குருவாக பட்டம் சூடி மடத்தின் கடமையை செய்து வருகிறார். மடத்திற்கும் சிஷ்யர்களுக்கும் தர்மபரிபாலனம் செய்யும்படி அடுத்த குலகுருவை தயார் செய்வது பட்டத்து குருஸ்வாமிகளின் பொறுப்பாகும். தங்கள் சிஷ்யர்கள் வசிக்கும் ஊர்களுக்கு சஞ்சாரம் சென்று குடும்ப தர்மம், ராஜ தர்மம் உட்பட பல தர்மங்களை உபதேசித்து, சிஷ்யர்களின் குடும்ப சமூக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் தந்து வழிகாட்டி, சிஷ்யர்களின் குலம் தழைக்க சிவபூஜை செய்து, குருப்பிரசாதம், தீஷை மந்திரோபதேசம் செய்து வருவதுஇம்மடத்தின் கடமை. ஒரு தந்தை தனது மகனின் நல்வாழ்வுக்காக சிந்திப்பது போல, கலாந்திர மாற்றங்களை உத்தேசித்து சிஷ்ய பரம்பரையின் நலனுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், பிரசாரங்கள், அரசு நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கொடுத்து, ஆன்மீக செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வதும் குருஸ்வாமிகளின் பொறுப்பாகும்.


குருஸ்வாமிகள் பரம்பரையினர் சிதம்பரத்திலிருந்து சோழர்காலத்தில் வந்ததாக மடகர்ணபரம்பரை செய்திகள் கூறுவதும், வரலாற்று ஆவணங்களோடு ஒத்துவருகிறது. இன்றளவும் மடத்தின் பெயர் சிற்றம்பல நாயனார் மடம் என்று இருப்பது அதற்கு சான்று இன்றளவும் ஸ்ரீ சிதம்பரம் கோயிலில் மடத்தின் முறைகார தீஷிதர் உள்ளார். மடத்தின் சார்பில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு அர்ச்சனைகள் நடத்தி பிரசாதங்கள் அனுப்பிடுவர். வருஷம் ஒருமுறை மடத்திற்கு விஜயம் செய்வர். மடத்தின் விசேஷங்களுக்கு குருஸ்வாமியார் அழைப்பனுப்பி சிதம்பரம் தீஷிதர் வந்து கலந்துகொள்வது மடத்தின் பாரம்பாியாகும். முற்காலத்திய விபூதி பிரசாத கடிதம் பின்னிணைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


தற்போது சிதம்பரத்தில் உள்ள நம் மடத்திற்கானமுறைகார தீசஷிதர்,


சி.சந்திசேகர் தசஷிதர்,
த/பெ.சின்மயானந்த சுப்ரமணிய தீசஷிதர்,
சின்மய நிவாஸ்,
ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்தி கோயில்,
ஸ்ரீ சபாநாயர் கோயில் டிரஸ்டி & பூஜை
63/152, கீழரத வீதி,
சிதம்பரம் - 608001.


அன்றாடம் அய்யம்பாளையம் மடத்தின் சார்பில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் பூஜை செய்யப்பட்டு மாதமொருமுறை பிரசாதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.


ஸ்ரீ சிவகாமி அம்மாள் சமே ஸ்ரீசிதம்பரேஸ்வரர் இம்மடத்தில் ஆத்மார்த்த தெய்வமாக அருள்பாலிக்கிறார்கள். மடம் ஆதியில் இடப்பாடி அருகே உள்ள வௌ்ளாற்றிலும் பின்பு கருமாபுரம், பெருந்துறை போன்ற ஊர்களில் இருந்து தற்போது திருச்செங்கோடு சுள்ளிப்பாளையம் அருகே உள்ள அருணகிாி அய்யம்பாளையத்தில் இருந்து சிஷ்யபரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. இம்மடத்திற்கு ஒரு காலத்தில் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் பூஜைக்காக இரண்டாயிரம் ஏக்கர் மான்யம் இருந்ததாக வரலாறு.


'தாரமங்கலம் கட்டி முதலியார் (கொங்கு வௌ்ளாளர், நீருணி கோத்திரம்). சிதம்பரத்திலிருந்து பாரத்துவாஜ கோத்திரத்து ஆதிசைவ குருக்களை அழைத்துவந்து அன்பாக ஆதரித்து தாரமங்கலம் கோயில் பூஜை செய்யும்படி நியமித்தார். பெயர் சிற்றம்பல குருக்கள். வௌ்ளாறு ஆத்ரேய கோத்திரம் சிவசமய பண்டிதர் குமாரத்தி சிவகாமியம்மையை மணந்தார். குழந்தையில்லாமல் கொங்குநாட்டு குருத்துவத்தைக் (சிவசமய பண்டிதர் சிற்றம்பல குருக்களுக்கு) கொடுத்தார். (இரண்டாம்தாரமாக) அமரகோணி காசிப கோத்திரத்து குருக்களிம் செல்லம் என்னும் கன்னிகையை விவாகம் செய்து கொண்டார். மூத்தவருக்கு ஒரு ஆண்மகவும், இளைதாரத்துக்கு இரு மகன்களும் பிறந்தனர். மூத்தவருக்கு சிற்றம்பலம் என்றும், இளையவருக்கு அழகிய சிற்றம்பலம் என்றும், மற்றொருவருக்கு தில்லை சிற்றம்பலம் என்றும் பெயர்வைத்தனர். தனக்கு வௌ்ளாறு சிவசமய பண்டிதரால் கிடைத்த குருத்துவத்தை மூன்றாக்கி மூவருக்கும் கொடுத்தார். தங்கள் தாயாதிகளில் ஒருவரை மீனாட்சி சைவ புரந்தர பண்டிதர் என்று பட்டங்கொடுத்து காடையூர் மடாதிபதியாக்கினவர் தில்லைச் சிற்றம்பல ஸ்வாமிகளாவர்.


இச்செய்தி திருச்செங்கோடு தி.அ.முத்துசாமிக்கோனார் அவர்கள் 1924-ல், எழுதி வெளியிட்ட ‘கொங்கு நாடு’ என்னும் நூலில் கருமாபுரம் பற்றிய வரலாற்று பகுதியில் பதிவாகியுள்ளது. வௌ்ளாறு ஆத்திரேய கோத்திரத்து சிவசமய பண்டிதரவர்கள் இன்றும் கீழ்சாத்தம்பூர் மடம் மற்றும் சிவகிாி மடம் என பிாிந்து குலகுரு மடமாக அரையநாடு மற்றும் காஞ்சிக்கோயில் நாட்டு கவுண்டர்களுக்கு குலகுருவாக இருந்து வருகிறார்.


சங்ககிாி கோட்டையும் இம்முடி சிற்றம்பல நாயனார் குரு சுவாமிகளும் -


சிற்றம்பல நாயனார் பூர்வாசிரியர். ஸ்ரீசோமேசுர சுவாமி ஆலயத்துக்குக் குருக்கள் கருமாபுரம் இம்முடி சிற்றம்பல நாயனார். இவர் தளவா் ராமப்பைய்யர்ரவர்கள் சங்ககிரி கோட்டைக்கு விஜயம் செய்திருந்த போது தளவாயர்களைக் காணும் பொருட்டாக சகல மேளவாத்தியங்களுடனேயும் கோயில் அதிகாரிகள் சிப்பந்திகளுடனேயும், கட்டியக்காரன் வௌ்ளித்தடி கொண்டு ஜனங்களை விலக்கித் தட்டுகளில் தேங்காய், பழம், புஷ்பமாதிரி சாதனங்களைத் தாங்கி வருவார் நெருங்கிவர தளவாயர்கள் உத்திரவின் போில் உட்புகுந்தனர். இவர் ஆச்சாரியார் இலட்சணமாக விபூதியணித்து உருத்திராசஷங்கள். முறைப்படிக்குச் சிரமாலை, உரமாலை, காமாலை, கௌரி சங்கர உருத்திராசஷங்களும் விளங்க ஆறுகட்டி காதழில் அசைய சிறந்த சைவப்பழமாக முன் சென்றனர். இவரது சைவப் பொலிவைக் கண்டு சந்தோஷித்து இருக்கை ஈந்து குசலம் வினவி கோயில் விஷயங்களை வினவினர். சமீபத்திலுள்ளவர்கள், சமீபித்து மூன்று நாழிகை தூரத்துக் கருமாபுரம் என்னும் ஊர் இவரது மடம். இந்நாட்டுக் கவுண்டர்கள் இம்மடத்துச் சிஷ்யர்கள். இந்த மடத்துக்குப் பூர்வ மடம் இடைப்பாடிக்குச் சமீபத்துத் தில்லைச் சிற்றம்பல நாயனார் மடம் என்பதினின்று பிாிந்தது இவர்கள் மடம். சங்ககிரி கடிஸ்தலத்துக்கு ஆதிசைவ மடாதிபதி இவர்கள். கிரமாந்திரங்களில் நடக்கக்கூடிய கோயில் பிரதிஷ்டை சாந்தி சம்புரோணங்களெல்லாம் இவர்களாலெயே அல்லது இவர்கள் வகை சாதகர்களாளே தான் நடக்க வேண்டியது என்கிறார்கள். அப்படியா சந்தோஷம் என்ற கூறி கொண்டுவந்த தேவ பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டனர். ஆசாரிய திருவுருவம் லட்சணமாக இருக்கிறது என்று ஜோடி சால்வை உதவி, இம்முடி என்ற பட்டம் கொடுத்தோம். இன்று முதல் இம்முடிச் சிற்றம்பல நாயனார் என்று வழங்கி வருக என்று அனுப்பினார் (ராமப்பைய்யர் அவர்கள் மதுரை நாயக்கர்களுக்கு ஆச்சாரியர். இவர்கள் இஸ்லாமிய படையெடுப்புக்களில் இருந்து தமிழர்களை காத்து மடங்களை, கோயில்களை புணரமைத்து காத்தோர். பல தர்மங்களை இவர் கால கட்டத்தில் செய்துள்ளார். இவரது வம்சாவளியில் வந்தவரே ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமண்ய சுவாமி). இச்செய்தி திருச்செங்கோடு அ.முத்துச்சாமிக்கோனார் அவர்கள் 1924இல் எழுதி வெளியிட்ட ‘கொங்கு நாடு’ என்னும் நூலில் சங்ககிரி வரலாற்று பகுதியில் பதிவாகியுள்ளது.


இம்மடாதிபதிகள் வைத்தியம், ஜோதிடம் என பல சாஸ்திரங்களில் வல்லவர்களாக இருப்பவர்கள் தற்போது சங்ககிரி ஈஸ்வரன் கோயில், குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோயில், மேழியபள்ளி பெரியகாண்டியம்மன் அண்ணமார் கோயில், மல்லசமுத்ரம் செல்லாண்டியம்மன் கோயில், கொளாநல்லி பொன்குழலியம்மன், கோட்டை மாரியம்மன் கோயில், பாம்பலங்காரநாத ஈஸ்வரர் கோயில், பெரியமணலி கரியகாளியம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில், வையப்பமலை - வேலாயுதசுவாமி கோயில்களில் உற்சவத்திற்கு முன்னிலை வகித்து தேரோட்டும் உரிமை உள்ளது. தை மாதத்தில் திருச்செங்கோட்டில் கைலாசநாதர், சித்திரையில் திருச்செங்கோடு காளியம்மன் வகையறா கோயில் விழாக்கள் மற்றும் தேர்விழா நடத்திக் கொடுப்பது இம்மடத்திற்கு இருந்ததாக மடவரலாறு கூறுகிறது.


மூன்று கருப்பண்ண சுவாமிகள் -


அவினாசி ஆகாசகருப்பண்ணன், நடுவநேரி கருப்பண்ணன் மற்றும் அய்யம்பாளையம் தண்டிகை கருப்பண்ணன் போன்ற கருப்பண்ண சுவாமிகளை இம்மடத்தில் குலகுரு ஒரு காலத்தில் பாலக்காடு சென்று வரும்போது கொண்டு வந்துள்ளார். அவற்றில் ஆகாச கருப்பண்ணன் அவினாசியில் வரும் வழியிலேயே இறங்கிக்கொண்டு பிரதிஷ்டையாகி விட்டது. கீழ்க்கரை பூந்துறை நாட்டின் வடக்கு எல்லையான நடுவநேரியில் ஒரு கருப்பண்ணனை பிரதிஷ்டை செய்து காவல் தெய்வமாக விளங்கிட வருகிறது. வருடாவரும் பரிவார பூஜைகளை இன்னும் செய்து வருகிறார். மூன்றாவது கருப்பண்ணனனை மடத்தின் அருகில் மடத்தின் காவல் தெய்வமாக பிரதிஷ்டை செய்து தினப்படி பூஜை நடந்து வருகிறது. சிஷ்ய பரிபாலனத்திற்கு சஞ்சாரம் செல்லும் காலத்தில் தண்டிகை (பல்லக்கு) கருப்பண்ணனுக்கு பலி கொடுத்து கிளம்புவர். தற்போதைய அய்யம்பாளையம் குரு பீடம் முன்பு விஜயமங்கலத்தில் இருந்தது. குரும்பரம்பரையில் முன்னோர் ஒருவர் சஞ்சாரம் நிமித்தமாக பாலக்காடு சென்று திரும்பவும் போது ஒரு ஊரில் இரவு தங்குகிறார்கள். அங்கே வந்த ஊர் மக்கள் இங்கே தங்கவேண்டாம் எனவும் ஆகாயக் கருப்பு விளையாடும் இடம் என்றும் கூறுகிறார்கள். தங்கினால் ஆபத்து விளையும் எனவும் எச்சாிக்கிறார்கள். எனினும் குருஸ்வாமியார் அவர்கள் அங்கேய தங்குகிறார்கள். மறுநாள் காலையில் ஊர் மக்கள் கூடி வந்து குருஸ்வாமியாருக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ என பார்க்கிறார்கள். குருஸ்வாமியார் நலமாக இருக்கவும் ஆச்சரியப்பட்டு ஆகாய கருப்பனார்வரவில்லையா என கேட்கிறார்கள். ‘வந்தார்கள், விளையாடினார்கள்’, என்று குருஸ்வாமிகள் கூறவும், ஊர் மக்கள் ஆச்சாியப்பட்டு, இந்த கருப்பினைக்கண்டு நாங்கள் மிகவும் பயப்படுகிறோம். குருவானவர் தயவு செய்து இந்த ஆகாய கருப்பண்ணனையும் உங்கள் கூடவே கூட்டிச்சென்று விட்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசம் என மக்கள் வேண்டுகிறார்கள். குருஸ்வாமிகளும் சம்மதித்து நாளை கூட்டிச் சென்று விடுகிறேன் என உறுதி கூறுகிறார்கள். அப்படியே அடுத்த நாள் காலை ஊர் மக்கள் வந்த போது ஆகாயக் கருப்பணசாமி மற்றும் இரு கருப்பண்ண சாமிகளையும் (தண்டி கருப்பண்ணசாமி, நடுவநேரிகருப்பண்ணசாமி) ஒரு குடத்தில் இட்டு வேடு கட்டி வைத்திருப்பதாகவும், குடத்தோடு கருப்பண்ணசாமிகளை எடுத்துச் சென்று விடுவதாகவும் கூறுகிறார். ஊர் மக்கள் குடத்தில் கருப்பண்ண சாமிகள் இருப்பதை எப்படி உறுதி செய்வது என்ற கேட்கிறார்கள். குடத்தை நீங்களே தூக்கி வண்டியில் வையுங்கள் என குருஸ்வாமியார் கூறவும், ஊர் மக்கள் முயல்கிறார்கள் குடத்தை தூக்க முடியவில்லை. குருஸ்வாமியவர்கள் அவர்கள் கையைக் காட்டியதும் குடம் அப்படியே தானாக வண்டியில் ஏறிவிட்டது. குருஸ்வாமியவர்களும் கருப்புகளோடு ஊரை விட்டு கிளம்பினார். விஜயமங்கலம் வந்தவுடன் குருஸ்வாமியிடம் ஆகாயக்கருப்பண்ண சாமி தன்னை இறக்கி விட்டுவிடும் படியும் தான் இங்கேயே இருந்து ஊர் மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன். என்றும் வேண்டுகிறது. குருஸ்வாமியும் ஆசீர்வதித்து அங்கேயே இருந்து காவல் காக்க வைத்து விடுகிறார். ஆகாசப்பாளையம் எனஎ அந்த ஊருக்கு பேரும் வைத்து விட்டு குருஸ்வாமி அய்யம்பாளையம் கிளம்பி வந்து, தண்டி கருப்பண்ணசாமியை அய்யம்பாளையத்திலும், நடுவே நேரிகருப்பண்ண சாமியை இடப்பாடி அருகிலுள்ள வேப்பநோிலும் தங்கி மக்களுக்கு அருள்பாலிக்கும் படி கூறுகிறார். அதனால்தான் ஆகாயக்கருப்பனுக்கு மேற்கு திசை நோக்கியும், நடுவநேரிகருப்பனுக்கு வடக்கு திசை நோக்கியும் இன்றும் பூசை தொடர்ந்து தண்டிகருப்பணன் கோவிலில் நடைபெறுகிறது. நடுவநேரிக்கருப்பண்ண சாமியின் பராமாிப்பு இன்றும் அய்யம்பாளையம் குருக்கள் வசமே உள்ளது.


முந்தைய குருக்களின் பட்டாபிஷேகம் குமாரமங்கலம் தூரன் கூட்டம் காலம்சென்ற மிட்டாதாரர் திரு.செங்கோட்டுவேல் கவுண்டர் அவர்கள் தலைமையில் சிஷ்ய பரம்பரையினர் அனைவரும் சேர்ந்து நடத்திவைத்தனர். மடத்தில் சில கட்டுமானப் பணிகளையும் குமாரமங்கலம் மற்றும் மொடக்குறிச்சி தூரன் கூட்டத்தார் செய்து கொடுத்துள்ளனர்.


தற்காலத்தில் - இடைக்காலத்தில் 1935 வாக்கில் மடத்தின் சஞ்சாரம் தமிழக அரசியல் மாற்றங்களால் நின்றுவிட்டது. ஆனால், சிஷ்யர்களின் ஆதரவின்றியும் கூட மடத்தின் ஆச்சார வழக்கப்படி சிஷ்யர்களுக்கான பூஜை நடந்து வந்தது. தற்போது சிஷ்யர்கள் விட்டுப்போன குலகுருக்களை நாடி வர ஆரம்பித்துள்ளனர்.


தற்போது இரண்டு வெங்கம்பூர் தூரன் கூட்டத்தார் பொன்காளியம்மன் கோயில் கும்பாகிசேகத்திற்கு கூட்டிச்சென்று குலகுருவிடம் தெய்வப்பிரசாதமும், குருப்பிரசாதமும் பெற்றனர். கருமாபுரம் பொருளந்தை கூட்டத்தார் செல்லாண்டியம்மன் கோயிலுக்கு கூட்டி சென்று ஆசி பெற்றனர். கோக்கலை செல்லன் கூட்டத்தார் அவர்கள் நிர்வாகத்தில் உள்ள கோயில் கும்பாபிஷேக வைபவத்தை குருஸ்வாமியாவர்கள் முன்னிலையில் நடத்தியுள்ளனர். பெருங்குறிச்சி தேவேந்திரன் கூட்டத்தார் தங்கள் கவுண்டச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை குலகுருக்கள் முன்னிலையில் நடத்தியுள்ளனர். மேழிப்பள்ளியில் ஸ்ரீஅண்ணமார் கோயில் தேரோட்டம் மற்றும் விசேஷங்களுக்கு குருஸ்வாமிகளை வரவேற்று நடப்பிக்கிறார்கள். கூத்தம்பூண்டி காணியாளர் தங்கள் கோயில் கும்பாபிஷேகத்திற்கு குருஸ்வாமிகளை வரவேற்று நடப்புவித்தனர். கொக்கராயன்பேட்டை காணியாளர் வகையறா மண்டபத்தூர் கன்னன் கூட்டத்தார் வழிபட்டு வரும் ஊத்துக்குளி ஸ்ரீ அத்தாயம்மன் கோயில் நிர்மானப் பணிகள் குலகுரு முன்னின்று துவக்கி வைத்தார்.


திருச்செங்கோட்டில் அனைத்து குலகுருக்களையும் அறிமுகம் செய்யும் குலகுரு அறிமுக விழா சிறப்பாக நடந்தது. தோக்கவாடி கோயிலைச் சேர்ந்த கொங்கு வௌ்ளாள கவுண்டர்கள் ஏற்பாட்டில் தோக்கவாடி ஸ்ரீ காகத்தலையம்மன் கோயிலில் கோபூஜை குருஸ்வாமிகள் முன்னின்று நடத்திக் கொடுத்தார். கொன்னையாறு செல்லன் கூட்டத்தார் ஏற்பாட்டில் அவர்கள் கோயிலிலும் கோ-பூஜை குருஸ்வாமிகள் முன்னிலையில் நடந்தது.


திருச்செங்கோடு வட்டம் கொக்கராயன்பேட்டையில், சித்ரமேழி தர்ம சபையார் ஏற்பாட்டிலும், கொக்கராயன்பேட்டை கன்ன கூட்ட காணியாளர்கள் முன்னிலையிலும், ஜெய வருஷம் (ஆங்கில ஆண்டு 2014) ஐப்பசி மாதம் குருஸ்வாமியார் தலைமையில் துலாகாவோி பூஜை துவக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள பெருவாாியான கவுண்டர்கள் கலந்துகொண்டு துலாகாவோி புண்ணியஸ்நானம் செய்து காவோி பூஜையில் கலந்துகொண்டு குருஸ்வாமியார் ஆசிகளும் பெற்றனர். துலாகாவோி ஸ்நான வைபவம் என்பது ஐப்பசி மாதம் காவோி நதியில் ஸ்நானம் செய்து காவோி நதிக்கு பூஜை செய்வதாகும். புராண சாஸ்திரங்களின்படி துலா ராசியில் சூாியன் சஞ்சரிக்கும் ஐப்பசி மாத வேளையில் காவோி நதி கங்கை உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளை விடவும் சக்தி பெற்றதாக மாறுகிறது. கங்கைநதி உ்ளிட்ட புண்ணிய நதிகளே இம்மாதத்தில் தங்கள் பாபங்களை போக்கிக் கொள்ள காவோியை நாடி வரம் என்பது ஐதீகம். துலாகாவோி பூஜையில் கலந்துகொண்டு ஸ்நானம் செய்வது பல பாவங்களுக்கு பாிகாரமாக அமைந்து நல்ல சௌபாக்யங்கள் சித்திடக்கும். துலாகாவோி பூஜை மற்றும் ஸ்நானத்தின் மகிமையை விளக்க துலாகாவேரி புராணம் என்று தனி புராணமே உள்ளது. ஸ்ரீரங்கம் உட்பட காவோp கரையில் உள்ள ஏராளமான கோயில்களில் இன்றளவும் துலாகாவோp பூஜைகள் மற்றும் உற்சவ மூர்த்திகள் தீர்த்தமாடுதலும் நடந்து வருகிறது. மிகவும் விசேஷமான துலாகாவேரி பூஜை குருஸ்வாமியாவர்கள் தலைமையில் நடந்து இவ்வட்டாரத்தில் பிரபல்யம் அடைந்துவருவது சிறப்புக்குாியதாகும்.


தற்காலத்தில் எல்லா கோயிலை சேர்ந்தவர்களும் தொய்வடைந்த குலகுரு பாரம்பாியத்தை அறிந்து மடத்தை நாடி வந்து பூஜைகளில் பங்கேற்கிறார்கள். மடத்தில் தங்கள் முன்னோர்கள் வாி கொடுத்த ஆவணங்களை பார்த்து மகிழ்கிறார்கள். தங்கள் கோயிலுக்கு அழைத்து சென்று குருஸ்வாமிகள் அருளும் ஆசிகளும் பெறுகிறார்கள். தங்கள் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் வைபவங்களுக்கு குலகுருக்களை நடத்திக் கொடுக்க அழைக்கிறார்கள். கல்யாணத்தின் போது பத்திாிக்கைகள் மீண்டும் வருகிறது. தற்போது பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் குருஸ்வாமிகளை மீண்டும் சஞ்சாரம் அழைக்க பலறும் ஆர்வமாக உள்ளார்கள்.