தோ் வேந்தா் போா்க்களத்துச்
சிலா் வெல்வா், சிலா் தோற்பா்;
ஏா்வேந்தா் போா்க்களத்துள்
இரப்பவரும் தோலாரே!
காா் நடக்கும் படி நடக்கும்
காராளா் தம்முடைய
ஏா் நடக்கும் எனில் புகழ்சால்
சீா்நடக்கும் திறம் நடக்கும்
திருவறத்திறன் செயல் நடக்கும்
பாா் நடக்கும் படைநடக்கும்
பசி நடக்க மாட்டாதே.