konguthervandhar
கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல வரலாறு

 

கொங்கு வேளாளா் பெருமக்கள் குலங்களில் சிறப்புமிகு பெயா் பெற்றவா்கள் தோ்வேந்தா் குலத்தாா். தேவேந்திரன் தேவா் தலைவன். நூறு அசுவமேத யாகம் செய்து இப்பதவியைப் பெற்றான்.

 

தேவேந்திரன் மேகவாகனன். மழை தரும் கடவுள். வயல்கள் கொண்ட மருத நிலைத்தலைவன் வறட்சிக்கும் இருளுக்கும் பகைவன். பணிக்கூட்டத்தாாிடமிருந்து கால்நடைகளைக் காத்தவன். பழந்தமிழா் புகாா் நகாில் தேவேந்திரனை வணங்கி இந்திர விழாக் கொண்டாடினா்.இக்காரணங்களால் தேவேந்திரனை வணங்குவோா் தோ்வேந்தா் குலத்தாா் என்று தங்களை அழைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது இச்சிறப்புமிகு தேவேந்திரன் பெயரைத் தம் பெயராக வைத்துக் கொண்டவா் வழித்தோன்றல்கள் குல முதல்வாின் பெயரைத் தங்கள் குலப் பெயராகக் கொண்டிருக்கலாம். எப்படியும் இப்பெயா் குலப்பெயராக இருப்பது சிறப்புக்குாியதாகும். க.பழனிசாமிப் புலவா் இக்குல முதல்வன் தேவேந்திரன் போலச் சிறப்பாக வாழ்ந்ததால் இக்குலத்தாா் தோ்வேந்தா் குலத்தாா் என அழைக்கப்பட்டதாகக் கூறுவாா்.

 

96 கீா்த்திப்பாடல், அலகுமலைக்குறவஞ்சி, வேளாளா் குலக் கும்மி, கொடுமணல் இலக்கியங்கள், செப்பேடு ஆகியவை இக்குலத்தைத் தோ்வேந்தா் குலம் என்று கூறப் பழங்கல்வெட்டுகள் இக் குலத்தை “தேவந்தை குலம்” என்று கூறுகிறது. இக் கல்வெட்டுகள் 12, 14 ஆம் நூற்றாண்டுக்குாியவை. 1804 ஆம் ஆண்டு மொஞ்சானூா்க் கல்வெட்டு மட்டும் தோ்வேந்தா் குலம் என்று கூறுகிறது.

 

தேவந்தை என்னும் சொல்லை தேவன் + தந்தை என்று பிாிக்கலாம். சாத்தன் + தந்தை = சாத்தந்தை; பொருளன் + தந்தை பொருளந்தை ஆவது போல் தேவன் +தந்தை தேவந்தை ஆவதற்கு இலக்கணம் விதி கூறுகிறது. பழங்காலத்தில் அஃறிணைக்கும், உயர்திணைக்கும் பொதுவாகப் பெரும் வழக்காக இருந்த சொல் கண்ணன், சாத்தன், தேவன், பூதன் என்னும் சொற்கள். ‘தேவன் வந்தனது புல் போடு’ என்றால் அஃறிணையாகிய கால்நடையைக் குறிக்கும். ‘தேவன் வந்தான் அணிகலன் கொடு’ என்றால் உயர்திணை ஆணைக் குறிக்கும்.

 

எனவே தேவன் என்ற பெயருடையவாின் தந்தை வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் தேவந்தை குலத்தார் ஆகியிருக்கலாம். ஆனால் இப்போது தேவேந்திர குலத்தார் பலர் தங்களைத் ‘தேர்வேந்தர் குலத்தார்’ என்று அழைத்துக் கொள்வதையும் அப்படி எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பழைய இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு எதிலும் ‘தேர்வேந்தர்’ என்ற சொல் பயின்று வரவில்லை. (இதே போல் பொருளந்தை குலத்தார் ‘பொருள் தந்த குலம்’ என்று கூறிக்கொள்வதற்கும் பண்டைய சான்றுகள் இல்லை).

 

இவர்கள் நாமக்கல் மாவட்டத்தையே முதற்கானியாக கொண்டு வாழ்ந்தார்கள் . திருச்செங்கோட்டிற்கு தெற்கே பரமத்திக்கு வடக்கே பரமத்திவட்டம் கபிலர்மலைக்கு அருகில் மணியனூர் , கந்தம்பாளையம் , தாண்டி பெருங்குறிச்சியில் அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில், சுள்ளிபாலையத்தில் அருள்மிகு கவுண்டச்சிஅம்மன் திருக்கோவில் உள்ளது. சுற்றுவட்டத்தில் 1500 குடும்பமும் இந்த அம்மன்களுக்கு குடிப்பாட்டு மக்கள் ஆவார்கள் .

 

வெள்ளக்கோயில் தொட்டாம்பட்டி அருள்மிகு கரியகாளிஅம்மன் திருக்கோவில், அருள்மிகு முத்துசாமி திருக்கோவில் தோ்வேந்தா் குல காணிக்கோவிலாகவும் உள்ளது . 1300 குடும்பங்கள் அருள்மிகு கரியகாளிஅம்மன், அருள்மிகு முத்துசாமியையும் குல தெய்வமாக வழிபடிகின்றனர் . இத்திருக்கோவில் முத்தூரிலிருந்து வெள்ளக்கோவில் செல்லும் வழியில் உள்ள நாட்ராயன் திருக்கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது .


காங்கயம் அருகிலுள்ள கீரனூரில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளஅருள்மிகுசெல்வநாயகிஅம்மன் திருக்கோவில்மூலவராகதனிச்சன்னதிகொண்டு தம் குல ஆதி அந்துவன்கீரன்காடைவிளையன் தேர்வேந்தர் ஆகிய ஆறு குல மக்களுக்கும் அருள்புரிகின்றார். இத்திருத்தலம் சென்னிமலையிலிருந்து காங்கயம் செல்லும் சாலையில் 12-வது கீ.மீ தொலைவில் நால்ரோடு பிரிவிலிருந்து மேற்கு நோக்கி சென்றால் 4கீ.மீ தொலைவில் கீரனூரில் அருள்மிகு செல்வநாயகிஅம்மன் திருக்கோவில் உள்ளது. 

 

குன்றத்தூர் கல்வெட்டிலும் பெருமாநல்லூர் கல்வெட்டிலும் தோ்வேந்தா் குலம் குறிக்கப்பட்டுள்ளது . வீரபாண்டிய தேவருக்கு பாரிச நாட்டு பெரும்பழனம் வேளாளர் தேவேந்தைகளான என்று கல்வெட்டு கூறும் . வீரபாண்டியனது தளபதிகளாக இவர்கள் இருந்தனர் என்பர். ஆண்குறிச்சி , பெண்குறிச்சி அழகான பெருங்குறிச்சி என்று ஒரு ஆங்கிலேயன் சிறப்பித்த பெருங்குறிச்சியில் அருள்மிகு பொன்காளிஅம்மன் கோவில் உள்ளது. 18 ஊர் மக்கள் 1500 குடும்பங்கள் அருள்மிகு பொன்காளிஅம்மனை குல தெய்வமாக வழிபடிகின்றனர் .

 

நல்லூர், கவுண்டிபாளையம், மணியனூர், சித்தம்பூண்டி, குன்னமலை, சுள்ளிபாளையம், பெருங்குறிச்சி, திடுமல், இராமதேவம் , தேவனாம்பாளையம், குப்புரிக்கா பாளையம், சித்தாளந்தூர், உஞ்சனை, மேட்டுப்பட்டி , வசந்தபுரம் , பெரியசோழிபாளையம், வெடியரசம்பாளையம், ஊத்துக்காடு, மோழிப்பள்ளி, ஏரிக்காடு, நல்லிப்பாளையம், நாமக்கல், ஆரியூர், வெள்ளக்கோயில், இளம்பிள்ளை,தோட்டம்பட்டி, ஆகிய ஊர்களில் எல்லாம் கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குலமக்கள் வாழ்கின்றனர்.

 

அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்



  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar


அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்