கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல காணியூர்கள்



தோ்வேந்தா் குலத்தாாின் பண்டைய காணியூர்கள் ஆாியூர், ஈசான மங்கலம், காகம், கீரனூர், தென்னிலை, பெருங்குறிச்சி, மங்கலம், மண்ணறை, முருங்கம், மொஞ்சனூர், விளக்கேத்தி, வேம்பத்தி, வேளாம்பூண்டி என்பனவாகும்..

இவற்றைத் தொகுத்து ஒரு பாடலும் பாடியுள்ளனர்.



“மண்டல மதிக்கவரு தென்னிலை ஈசான
மங்கைவேம் பத்திநகரும்
மண்ணறை பெருங்குறிச் சிப்பதி முருங்கமொடு
மங்கலம் கீரனூரும்
விண்டலம் அளாவுபுகழ் கொண்டதென் காகமும்
விளக்கேத்தி ஆாியூரும்
மிக்கவே ளாம்பூண்டி மொஞ்சனூர் இவையெலாம்
மிகஅரசு புாிநகுலனே
அண்டினம தாபரண தேவேந்திர குலதிலகன்
அதனில்வரு காராளனே
ஆவுடைய மாகலிங்கா் உமையதிரு வல்லிதன்
அடியிணையை மறவாதவா்
செண்டுமுலை யாா்வதன வேள்சின்னத் தம்பியருள்
சேயா உபயதூயா
தென்னவனை நிகரான குமாரசின் னயதீர
செகமண்ட லாதிபதியே”

 

இப்பாடல் தேவேந்திரகுல மொஞ்சனூா் சின்னத்தம்பிக் கவுண்டா் மகன் குமார சின்னய கவுண்டா் மீது பாடப்பட்டதாகும். ஆவுடைய மகாலிங்கரும், உமைய திருவல்லியும் மொஞ்சனூா்ச் சிவாலயத் தெய்வங்களாகும். இவா் பக்தித் திறமும், ஆட்சிச் சிறப்பும், மாட்சியும் இப்பாடலில் கூறப்படுகிறது.

ஆனால் கி.பி.1784ஆம் வருடம் பொன்குறிச்சியில் கீரனூா், கூத்தனூா், பொன்குறிச்சி, மொஞ்சனூா், வாங்கல், வேலம்பூண்டி ஆகிய ஆறு ஊா்களைச் சோ்ந்தவா்கள் மட்டுமே தேவேந்திர குலத்தாா் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனா். பெருங்குறிச்சி என்ற ஊா்ப் பெயா் பொன்குறிச்சி என மாறியுள்ளது. வாங்கலும், கூத்தனூரும் புதுக்காணியூா்களாகும்.

அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்



  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar


அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்

 

div>