கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல கல்வெட்டுகள்


தோ்வேந்தா் குலத்தாாின் கோயில் கொடை, திருப்பணி பற்றிய 5 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.


வௌ்ளாளா் தேவந்தைகளில் சிறியான் செயங்கொண்ட சோழக் காமிண்டன் வீரபாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டில் (கி.பி.1272) பெருமாநல்லூாில் (ஒத்தனூா் ஆன பெரும்பழனம்) உத்தம சோழீசுவரா் கோயில் முக மண்டபத்தில் திருவிளக்கு எாிக்கப் பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடையாகக் கொடுத்தாா்.
(இவா் பெயாிலிருந்து இவா் வீரபாண்டியனின் அரசியல் அதிகாாியாக இருந்திருக்கலாம் என்று தொிகிறது.)

 

பெருமாநல்லூாில் கோயிலில் வௌ்ளலாா் தேவந்தைகளில் சிறயான் பிள்ளான் என்பவா் வீரபாண்டியனின் 13ஆம் ஆட்சியாண்டில் உத்தமசோழீசுவரா் சன்னதியில் திருவிளக்கு வைக்க ஒரு அச்சு கொடையாக கொடுத்தாா்.

 

குன்னத்தூா் குன்றமுடையாா் கோயிலில் வௌ்ளலாா் தேவந்தைகளில் சொக்கன் இனிய பிள்ளை என்பவா் சந்தியா தீபம் ஒன்று வைக்க சுந்தரபாண்டியன் இருபதாம் ஆட்சியாண்டில் (1305) ஒரு அச்சுக் கொடையாகக் கொடுத்தாா்.

 

மேற்கண்ட சொக்கன் இனியபிள்ளை கி.பி.1312 ஆம் ஆண்டு குன்றத்தூா் குன்றமுடையாா் கோயிலில் சந்தியா தீபம் வைக்க ஒரு அச்சுக் கொடையாகக் கொடுத்தாா்.

 

கி.பி.1804 ஆம் ஆண்டு மொஞ்சனூர்க் கிராமம் பசுபதி பாளையத்தைச் சேர்ந்த தேவேந்திரகுலம் முத்துக் கவுண்டர் மகன் குமார சின்னைய கவுண்டர் சிவாலயத்தில் நந்திகுறடு (மண்டபம்) கட்டினார்.(இவா் இக்கல்வெட்டில் ‘சைவ வேளாள சாதி’ என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்புக்குாியதாகும்.)

 

 

 

1. இடம்- ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், குன்னத்தூர் குன்ற முடையார் கோயில்

காலம் - சுந்தரபாண்டிய தேவனின் இருபதாம் ஆட்சியாண்டு, கி.பி. 1305

செய்தி - குன்றத்தூர் வௌ;ளாளர் தேவந்தைகளில் சொக்கன் இனிய பிள்ளை குன்றமுடையார்க்கு சந்தியா தீபம் வைத்தார்.

 

கல்வெட்டு

 

ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீசுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு 20 வது அற்பிசை மாதம் குறுப்பு நாட்டுக் குன்றத்தூரில் வௌளாளன் தேவந்தைகளில் சொக்கன் இனிய பிள்ளையேன் ஆளுடையார் குன்றமுடையார்க்கு சந்தியா தீபத்துக்கு கோயில் காணியுடைய சிவப்பிராமணன் ஆத்ரய கோத்திரத்தில் உடையான் சிறுவனும் நாயனார் திருநிலை பட்டனும் பன்றிப்பட்டனும் ஆளவந்தானும் இவ்வனைவோம் வாங்கின அச்சு ஒன்றுக்கும் குடங்கொண்டு கோயில் புகுவான் சந்திராதித்தவரை செலுத்துவோமாகவும் பன்மாகேஸ்வரர் ரட்சை.

 

2. இடம்- கோவை மாவட்டம், திருப்பூர் வட்டம், பெருமாநல்லூர் உத்தமசோழீசுவரமுடையார் கோயில்

காலம் - வீரபாண்டிய தேவனின் ஏழாம் ஆட்சியாண்டு, கி.பி. 1272

செய்தி - ஒத்தனூரான பெரும்பழனத்து வௌ்ளாளா் தேவந்தைகளில் சிறியான் செயங்கொண்ட சோழக் காமிண்டன் உத்தமசோழீ சுவரமுடையார் கோயில் முக மண்டபத்தில் திருவிளக்கு வைத்தார்.

 

கல்வெட்டு

 

ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு 7வது ஐப்பசி மாதம் முதலாக வடபாசார நாட்டு ஒத்தனூரான பெரும்பழனத்து வௌ;ளாளன் தேவந்தைகளில் சிறியான் செயங்கொண்டசோழ காமிண்டனேன் நாயனார் உத்தமசோழீசுரமுடையார் முகமண்டபத்துக்கு நான் வைத்த திருவிளக்கு ஒன்றுக்கு குடுத்த பழஞ்சலாகை அச்சு ஒன்று இவ்வச்சு ஒன்றுங் கைக்கொண்டேன் மேற்படி நாட்டு ஒத்தனூரான பெரும்பழனத்துக் காணியுடைய சிவப்பிராமணன் காசுவ கோத்திரத்து ஆளவந்தான் அப்பனான அன்னதான நம்பியேன் குடங்கொண்டு கோயில் புகுவான் சந்திராதித்தவரை செலுத்தவானாக இது பன்மாகேஸ்வரர் ரட்சை.

 

3. இடம்- கோவை மாவட்டம், திருப்பூர் வட்டம், பெருமாநல்லூர் உத்தம சோழீசுரமுடையார் கோயில்

காலம் - வீரபாண்டிய தேவனின் 13ஆவது ஆட்சியாண்டு, கி.பி 1278

செய்தி - ஒத்தனூரான பெரும்பழனத்து வௌ்ளாளா் தேவந்தைகளில் சிறியான் பிள்ளான் உத்தம சோழீசுவரருக்குத் திருவிளக்கு வைத்தார்.

 

கல்வெட்டு

 

ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 13வது ஆவணி முதலாக வடபாசாரநாட்டு ஒத்தனூரான பெரும்பழனத்து வௌ்ளாளன் தேவந்தைகளில் சிறியான் பிள்ளானேன் நாயனார் உத்தம சோழீசுரமுடையார்க்கு திருவிளக்கு ஒன்றுக்குக் குடுத்த அச்சொன்று இவ்வச்சு ஒன்றுங் கைக்கொண்டேன் மேற்படி நாட்டு ஒத்தனூரான பெரும்பழனத்துக் காணியுடைய சிவப்பிராமணன் காசுவகோத்திரத்து ஆளவந்தான் அப்பனான அன்னதான நம்பியேன் சந்திராதித்தவரை செலுத்துவதாக பன்மாகேஸ்வரரட்சை.

 

 

4. இடம்- ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், குன்னத்தூர் குன்ற முடையார் கோயில் முத்துக்குமாரசாமி சந்நதி

காலம் - சுந்தரபாண்டிய தேவனின் 27ஆம் ஆட்சியாண்டு, கி.பி.1312

செய்தி - குன்றத்தூர் வௌ்ளாளா் தேவந்தைகளில் சொக்கன் இனிய பிள்ளை குன்றமுடையார் கோயிலில் சந்தியா தீபம் வைத்தார்.

 

கல்வெட்டு

 

ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ்சிறக்க ஸ்ரீசுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு 27வது கார்த்திகை மாதம் குறுப்பு நாட்டுக் குன்றத்தூல் வௌளாளன் தேவந்தைகளில் சொக்கன் இனியபிள்ளையேன் ஆளுடையார்க்கும் சங்காதி......சந்தியா தீபம் ஒன்றுக்கு வாங்கின அச்சு.

 

 

5. இடம்- கரூர் மாவட்டம், கரூர் வட்டம், மொஞ்சனூர் சிவாலயம் நந்தி மண்டபம்.

காலம் - கி.பி.1804இ விஜய ஐப்பசி 18ஆம் நாள்

செய்தி - மொஞ்சனூர் பசுபதிபாளையம் தேவேந்திர குலம் குமார சின்னய கவுண்டர் சிவாலயத்தில் நந்தி குறடு அமைத்தார்.

 

கல்வெட்டு

 

சகாப்தம் 4905 விஜய வருஷம் ஐப்பசி மாதம் 18ந் தேதி மொஞ்சனூர்க் கிராமம் பசுபதிபாளையம் சைவ வேளாளர் ஜாதி தேவேந்திர கோத்திரம் முத்துக்கவுண்டர் மகன் குமார சின்னைய கவுண்டர் நந்தியீசன் குறடு செய்வித்து உபயம்.

 

கீரனூா்க் கல்வெட்டு

 

காங்கய நாட்டுக் கீரனூாில் பிற காணியாளா்களான ஆதி குலம், அந்துவன் குலம், காடை குலம், கீரை குலம், விளைய குலம் சாா்ந்த வேளாளா்களோடு சோ்ந்து தேவேந்திர குலந்தாரும் உள்ளுர் செல்லப்பிள்ளையாருக்குக் கொடை கொடுத்தனா். தேவேந்திர குலத்தாா் சாா்பில் செல்வன் கூத்தா் என்பவா் கொடையில் பங்கு கொண்டுள்ளாா்

 

அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்



  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar


அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்