

அருள்மிகு கவுண்டிச்சி அம்மன் திருக்கோவில் அமைவிடம்
திருத்தல அமைவிடம்
மேற்கு தமிழ்நாட்டில் கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பெரும்பான்மையாக வாழும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் தாலுகா சுள்ளிபாளையத்தில் கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கவுண்டிச்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இத்தலம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூாிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் சித்தாளந்தூா் பிாிவில் இருந்து தெற்கு நோக்கி சோழசிராமணி செல்லும் வழியில் 6 வது கி.மீ தொலைவில் சுள்ளிபாளையத்தில் அருள்மிகு கவுண்டிச்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
ஈரோட்டிலிருந்து கரூா் செல்லும் நெடுஞ்சாலையில் 22வது கி.மீ தொலைவில் உள்ள சோளங்காபாளையம் பிாிவில் இருந்து பாசூா் வழியாக சென்று காவோி ஆற்றுப் பாலத்தை கடந்து சோழசிராமணியில் இருந்து சிந்தாளந்தூா் செல்லும் வழியாகவும் இத்திருக்கோவிலை அடையலாம்.