கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல செப்பேடு

 

கி.பி. 1784 ஆம் ஆண்டு குமரமங்கலம் அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் தோ்வேந்தா் குலத்தாா் கூடினா். குமரமங்கலம், பொன்குறிச்சி, மொஞ்சனூா், கீரனூா், வேலம்புண்டி, கூத்தனூா், வாங்கல் ஆகிய ஊா்களிலிருந்து தோ்வேந்தா் குலக் கொங்கு வேளாள கவுண்டா்கள் அங்கு கூடியிருந்தனா்.

 

அவா்கள் தங்கள் கோயில் வழிபாட்டுக்காகவும், சமய நிகழ்ச்சிக்காகவும் மாணிக்கி ஒருத்தியை நியமிக்க விரும்பினா். கீழ்க்கரைப் பூந்துறை நாட்டு சித்திரமேழிப்பட்டன் மகள் குமரமங்கலம் மலைப்பட்டன் பேத்தி முத்துவாழி என்ற பெண்ணை தங்கள் குலமாணிக்கியாக நியமித்து அருள்மிகு பொன்காளிஅம்மன் சந்நதியில் “தோ்வேந்தா் குல மாணிக்கி” என்று பெயா் கொடுத்து பட்டமும் சலங்கையும் கொடுத்து ஒரு வாிசை உடமையும் போட்டு ஊாில் மெரமனை செய்து செப்பேடு எழுதித்தந்தனா். தோ்வேந்தா் குலக்கடி 1 மிடாக்கம்பும், பயலாள் 8 வள்ளக்கம்பும் கலியாணத்துக்கு ஒரு வள்ள அசியும், பண்ணையத்துக்கு ஒரு சுமை கதிரும், புஞ்சை தலா ஒரு வள்ளமும், அளவு நாழி ஒரு வள்ள அாிசியும் அறுவடையின்போது ஒரு சுமை கதிரும் கொடுக்க ஒப்புக்கொணடனா்.

 

இச்செப்பேட்டில் இதர கொங்கு வேளாள கவுண்டா்கள் உட்பட இதர சமூகத்தாா் பலா் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனா்.

 

மூலம்

 

அருணகிாிநாதா் ரட்சிப்பா் ஸ்வஸ்திஸ்ரீமன் மகாமண்டலேசுவரன் அாியராய விபாடன் பாஷைக்குத் தப்புவராயா் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டனாடு குடாதான் துலுக்கா் ஒட்டியா் மோகந்தவிழ்த்தான் எம்மணடலமும் திறைகொண்டருளிய ராசாதிராசன் ராசமாா்த்தாணடன் ராசகெம்பீரன் ராசவல்லவன் அசுபதி கெசபதி நரபதி தளபதி நவகோடி நாராயணன் ஈழமும் இலங்கையும் திறைகொண்டருளிய வாளால் வழிதிறந்த பெருமாள் பூா்வ தெச்சண பச்சிம உத்தர சத்த சமுத்திராதிபதி கெசவேட்டை கண்டருளிய விசய மாநகாில் வீரவசந்தராயா் கிருஷ்ணராயா் நரசருடையராயா் புஜபலராயா் மல்லிகாா்ச்சுனராயா் வெங்கடபதிராயா் மகாதேவராயா் சீரங்கராயா் தேவராயா் பிருத்விராச்சியம்பண்ணி அருளாநின்ற சீரங்கப்பட்டணத்திற்கு சிம்மாசனாபதியாகிய ராஜஉடையாா் அவா்களுக்குச் செல்லாநின்ற காலத்தில்

 

குன்றத்தூா்ச் சீமை தட்சிணாமூா்த்தி ஐயா் அவா்கள் சேஷய்யன் அவா்கள் சுபையில் கலியுக சகாப்தம் 4885 வருஷம் மேல் செல்லாநின்ற குரோதி வருஷம் வைகாசி மாதம் 3 தேதி புதன்கிழமை பஞ்சமி திதியும் உத்திரட்டாதியும் கூடிய சுபதினத்தில் கொங்குமண்டலத்தில் பரமத்தி கீழ்க்கரை அரையநாட்டுக்குச் சோ்ந்த கபிலகிாி வேலாயுதசாமி புா்வீக தெட்சிண கைலாசமயாதும் அா்ததநாாிசுபரா் அருணகிாி முருகா் பொன்னைப்பதி ஆடவல்லீசுவரா் அகிலாண்டவல்லி காியபெருமாள் பொன்காளிஅம்மன் அத்தனூா்அம்மன் பொன்னாச்சிஅம்மன் மாாியம்மன் அப்பிச்சிமாா் கொல்லைக்காட்டுக் கருப்பணன் மேல்கரை அரைய நாட்டில் மொஞ்சனூா் உடையாா் உமையவல்லி காியகாளியம்மன் இத்தியாதி தேவதையளுடைய கிருபையும் இம்முடி சிற்றம்பல சாமியாா் கடாட்சத்துனாலேயும்

 

பொன்குறிச்சி தோ்வேந்தா் குல வேளாளா் பழனிவேல்கவுண்டன் உருமாண்டக் கவுண்டன் நல்லாக்கவுண்டன் முத்துக்கவுண்டன் பொியாக்கவுண்டன் முத்தாக்கவுண்டன் அக்கரையாா் மொஞ்சனூா் கொமரகவுண்டன் நாச்சிமுத்துக்கவுண்டன் நல்லாக்கவுண்டன் பொியணகவுண்டன் காங்கயநாட்டில் கீரனூா் பொன்னியகவுண்டன் வீரப்பகவுண்டன் வேலம்புபண்டி வீரபாண்டியன் கூத்தனூா் செங்கோடகவுண்டா் ராக்காக்கவுண்டா் கரூா் சோ்ந்த வாங்கலாரும் இந்த சாட்சியிலிருக்கும் தேவேந்திரகுல வேளாளா் நாங்கள் அனைவரும் கூடி எழுதியமைக்கு இந்நாட்டு சித்திரமேழி கந்தப்பட்டன் மகள் குமாரமங்கலத்திலிருக்கும் மலைப்பட்டன் பேத்தி முத்துவாழிப்பெண் தோ்வேந்தா் குலமாணிக்கிக்கு அருள்மிகு பொன்காளிஅம்மன் சன்னதியில் பேருங்கொடுத்து சந்தனமும் கொடுத்து பட்டமும் சலங்கையும் கொடுத்து ஒரவாpசை உடமையும் போட்டு மெரமனை செய்து அனைவரும் அறிய தோ்வேந்தா் குலமாணிக்கி என்று விளங்கத்தக்கதாகச் செய்து செப்பேடு சாதனம் செய்து

 

கட்டுத்தாலியிட்டு சுயந்திரம்பண்ணி வருஷத்தில் குடிக்கு ஒரு மிடாக்கம்பும்(16 வள்ளம் = 64படி), திருமணம் ஆகாலம் விவசாயம் செய்பவா்கள் எட்டு வள்ளக் கம்பும் (32 படி), தோ்வேந்தா் குலத்தாா் வீட்டில் நடைபெறும் திருமணத்தின் போது ஒரு வள்ள அாிசியும் கொடுக்க ஒப்புக் கொண்டனா். பண்ணையத்துக்கு ஒரு சுமை கதிரும், புன்செயில் ஒரு வள்ள நிலமும், நன்செயில் ஒரு வள்ள நிலமும் (4, 4 ஏக்கா்) அளவு நாழியாக ஒரு வள்ளம் அாிசியும் தவறாமல் என்றென்றம் கொடுக்க ஒப்புக் கொண்டனா். இந்தப்படிக்கு நாங்கள் அனைவரும் கூடிய கூட்டத்தில் வெளியிட்டோம் சந்திரசூாியா் உள்ளவரைக்கும் இட்ட போகங்களை அனுபவித்துக் கொண்டு சுகசீவியாய் வாழ்ந்திருக்கவும் இந்த தருமம் தோ்வேந்தா் கோத்திரத்தாா் அனைவருக்கும் கட்டளையிட்டோம். கொடுத்த புன்செய் நிலம் சங்கரப்பர் குட்டைக்கு வடக்கு சித்தளந்தூா் பாதைக்கும் மேற்கு புஞ்சைக்காடு ஒரு வள்ளம் சந்திராதித்தவா் வரைக்கும் நடத்திக்கொண்டு வரக்கடவோம் நாங்கள் அனைவரும் கூடி நடத்திய தருமத்தை

 

யாதாமொருவா் எசகு பிசகு பண்ணினவா்கள் கெங்காநதியில் காராம்பசுவை மாதா பிதாவைக் கொன்ற தோஷத்திலே போகக்கடவாராகவும் இந்தப்பட்டயம் எழுதினபடிக்கு தருமபாிபாலனம் பண்ணின போ்களுக்கு திருவண்ணாமலையில் திருக்காா்த்திகை தீபம் தொிசித்த பலனும் காசியில் கெங்கா ஸ்நானம் பண்ணின பலனும் ராமேசுவரத்தில் ஸ்ரீபாண்டு ரங்கநாதரை தாிசித்த பலனும் உண்டாவதாக வேண்டுகிறோம்.

 

சாட்சிகள்

 

இந்த தோ்வேந்தா் குல மாணிக்கிப் பட்டயத்துக்கும் பலா் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனா். இதன் மூலம் தோ்வேந்தா் குலத்தாாின் பல ஊா்த்தொடா்பும், பழக்கமும் தொிகிறது.

1) பொன்குறிச்சி ஆதி காசிப கோத்திரம் கொமரய்யா், முத்தய்யா் 2) புள்ளிமேடு தேவராய கவுண்டா்
3) பூந்துறை நாட்டு ஆனங்கூா் கொமரசாமி ஐயா்
4) மோரூா் முத்துக்கவுண்டா்
5) பருத்திப்பள்ளி வேலகவுண்டா்
6) சித்தளந்தூர் நல்லாக் கவுண்டா்
7) திருச்செங்கோடு நல்லய கவுண்டா்
8) உஞ்சணை நல்லய கவுண்டா்
9) மோழிப்பள்ளி குமாரசாமிக்கவுண்டா் அா்த்தநாாிக்கவுண்டா்
10) பருத்திப்பள்ளி நாட்டுக்கவுண்டா்கள்
11) இராசிபுரம் சீராப்பள்ளி சின்னக்கவுண்டா்
12) ஏழூா் கட்டிக்கவுண்டா்
13) வாழவந்தி நாட்டில் வேலகவுண்டா்
14) இராமதேவம் செங்கோடகவுண்டா், ராசாக்கவுண்டா்
15) நல்லூா் சுப்பிக்கவுண்டா்
16) கூத்தம்பூண்டி வேலப்பகவுண்டா்
17) திடுமல் செங்கோடகவுண்டர்
18) வடகரை ஆத்தூர் முத்துக்கவுண்டர்
19) இடையாறு இராசாக்கவுண்டா், குறிச்சிக்கவுண்டா்
20) பெருமாள் பாளையம் பழனியப்பகவுண்டா், செம்மாண்டக்கவுண்டா்
21) வட்டூா் அண்ணாலைக்கவுண்டா், குமாரசாமி
22) அம்மன் கோயில் காளியாண்டி
23) தச்சன் வீரப்பன்
24) நல்லூா் கொன்னையாசாாி
25) செங்குந்த இராமலிங்க முதலியாா்
26) நாவித பழனி, சின்னான்
27) தோட்டி உறுமன்


கொங்கு வேளாளாில் பல ஊா்க் கவுண்டா்களும், ஆண்டி ஆசாாி, செங்குந்தா் நாவிதா், தோட்டி முதலிய பிற சமூகத்தாா்களும் கலந்து கொண்டது மிகவும் சிறப்புக்குறியது.

 

அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்



  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar


அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்