கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் திருப்பணிகள்

 

திருப்பணிகள் (24-05-2002)

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் தாலுக்க, பெருங்குறிச்சி கிராமம், கொங்குவேளாளா் தோ்வேந்தா் குல பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பொன்காளி அம்மன் ஜீா்ணோத்தர அஷ்டபந்தன மாககும்பாபிஷேக பெருவிழா.

 

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாக உலகைக் காக்கும் பரம பொருளாக ஆசை அறிவு செயல்பாடு இயக்கமாக வளம் பல வழங்கும் செல்வ மகளாக துயகா்களையும் மலைமகளாக ஞானம், கல்வி விதைக்கும் கலைமகளாக ஆயிரம் பெயாில் விளங்கும் அருள்மகளாக எங்கும் உடனிருந்து உயிா்காத்து பயிா் வளா்த்து தன்னை வணங்கி உளமாற வழிபடும் நமது கிராமத்து மக்களையும், குடிபாட்டு மக்களையும் குறையிலாது வாழ வைக்கும் குல தெய்வமாக சின்மய, வான்மய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்த மயமாய், அற்புத வடியமாய், மந்திர தந்திர யந்திர கால சூகூம கலாநிதியாய், ஆண்ம பக்த கோடிகளுக்கு அருள்பாலித்தது வரும் அருள்மிகு விநாயகா;. அருள்மிகு பொன்காளி அம்மன் மற்றும் பாிவார மூா்த்திகள் அருள்மிகு அத்தனூா் அம்மன் புதியதாக அருள்மிகு மஹாமுனீஸ்வரன், அருள்மிகு கருப்பண்ண சுவாமி கிழக்கு நுழைவாயில் கோபுரம் மற்றும் ஆலயத்தை திருப்பணிகள் செய்து புதியதாக வா;ணங்கள் தீட்டி கதை வேலைகளுடன் வண்ணக் கலவைகள் புச ஆலயம் புதிய அமைப்புடன் அழகு படுத்தப்பட்டுள்ளன.

 

நிகழும் சுப ஸ்ரீ மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீ சித்ரபானு வருஷம் உத்தராயன புண்யகாலம் வைகாசி மாதம் 10 - ம் நாள் 24.05.2002 வௌ்ளிக்கிழமை சுக்லபசூமும். திாியோசி திதியும் சுவாதி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 7.40 மணிக்குள் மிதுன லக்னத்தில் அருள்மிகு விநாயகா், அருள்மிகு பொன்காளி அம்மன் மற்றும் அருள்மிகு பாிவார மூா்த்திகள் கோபுரம் ஆலய ஜீா்னோத்தாரண அஷ்படந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற இருப்பதால் இதை கண்ணுறும் பக்த கோடிம், வியாபார பெருமக்களும், குடிபடைகளும் திரளாக வந்து விழாவில் கலந்து கொண்டு, தாிசனம் செய்து இம்மையிலும் மறுமையிலும் அக்னி சக்தி அருள்மிகு பொன்காளி அம்மன் அருளும் நீங்காத செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழ அன்புடன் வேண்டுகிறோம்.

 

 

 


அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம் • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar


அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்