konguthervandhar
கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல குருக்கள்


 

அருணகிரி அய்யம்பாளையம் மடம்
ஸ்ரீமது இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள் திருமடம்


குலகுருவின் மகத்துவம்

 

"கொங்கு" எனும் சொல்"கொங்க குல 18 குடிகள்" வாழும் பிரதேசத்தை குறிக்கும் சொல்லாகும்.கொங்க குடிகளுக்கும், பிற குடிகள் பலவற்றிற்குமாக குலகுருக்கள் கொங்க தேசத்தில் பல தலைமுறைகளாக தாங்கள் ஏற்றுக்கொண்ட குடும்பங்களின் நலன் நோக்கி அவர்களுக்கு வழிகாட்டி வந்தனர்.


|| ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம் ||தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!
-திருமந்திரம்

 

குரு என்றால் இருளை விலக்குபவர் என்று பொருள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நமது மரபில் நமது முன்னோர் சிறந்து விளங்கினர். மாதாவால் நாம் உண்டாகிறோம், பிதாவால் குலம் வருகிறது. இங்ஙனம் வரும் குலத்தால் நமது குலகுருவும், குலதெய்வமும் கிடைக்கின்றன.

 

ஆயிரம் தாய்மார் இருந்தாலும் நமது தாய் வழியாகத்தானே தாயன்பை பெற்று உணர்கிறோம்! அதேபோல ஆயிரம் குருக்கள், தெய்வங்கள் இருப்பினும் நமது குலகுரு, குலதெய்வம் மூலமே நன்மை சித்திக்கும்.

 

தாய் தந்தையைக் காட்டுகிறாள், தந்தை குருவையும், குரு தெய்வத்தையும் காட்டுவதே நமது மரபு. தேவர்களுக்குக் குலகுரு பிருகஸ்பதி, அசுரர்களுக்கு சுக்கிராச்சாரி. இவர்கள் தத்தம் சிஷ்யர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டே செயல்கள் புரிந்து வந்ததனைக் காண்கிறோம். இதேபோல் அரசர்கள்தம் குலகுருக்கள் அவ்வரசர்களுக்கு நல்வழி காட்டியதனையும் ராமாயணம் போன்ற இதிகாசங்களின் வழி அறிகிறோம்.

 

குருவின் மகத்துவத்தினை உணர்த்த திருமூலர் தமது திருமந்திரத்தில் குருவே மனிதனுக்கு சிவம் என்கிறார்:

"குருவேசிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உறையுணா பெற்றதோர் கோவே"


 

இதே கருத்தினை ஆதிமறையாகிய வேதங்களும் கூறுகின்றன :


"குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேச்வர:
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீகுரவே நம:"
 

(பொருள்: குருவே பிரம்மன் அதாவது படைப்பவர், அவரே விஷ்ணு மற்றும் சிவன், அதாவது காத்து, மாற்றமும் அளிப்பவர் என்பதால் அவரே சாட்சாத் கடவுளுமாகிறார். அத்தகைய குருவினை நமஸ்கரிக்கிறேன்)

 

கொங்கதேசத்தில் இதனை உணர்ந்தே இத்தேசத்திற்கான பூர்வகுடிகள் 51 ஆதிசைவ ஆதீனங்களைநிறுவினர். இவ்வாதீனங்கள் குருகுலங்கள், குருமடாலயங்கள் என்று அழைக்கப்பட்டன. "அய்யம்பாளையம்", "குருக்கள்பட்டி" , "குருக்கள்பாளையம்" என்று ஊர்களையே கொங்கர் தத்தமது குருக்களுக்களித்து மகிழ்ந்தனர். கொங்கர் கொங்கதேசம் வருகையிலேயே குருக்களையும் அழைத்து வந்தனர் என கொங்கு காணிப்பட்டயம் கூறுகிறது (கொங்கு வெள்ளாளர் செப்பேடு பட்டயங்கள் (2007), கொங்கு ஆய்வு மையம், புலவர் செ. ராசு).

குருக்களே அக்காலத்தில் திருமணங்களை நிச்சயித்து வந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "வேதியன் பக்கம் விரைவுடனே சென்று"என்ற வரி மூலம் உணரலாம். கொங்கர் திருமணத்தின் ஆரம்பமே இதுதான். ஏனெனில் பிரும்மச்சாரிகள் அனைவருக்கும் குருவே பொருப்பு. இதனால்தான் "பிரும்மச்சரியங்கழித்தல்" என்ற சீரும் உள்ளது.

இதேபோல் கைகோர்வை சீரின் பொழுது குருக்கள் மறைகூறி ஆசி தந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "மறையோர்கள் ஆசிகூற" என்ற வரிமூலம் உணரலாம். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கவும், ஆசி கூறவும் செய்த குருக்களுக்கு "மங்கிலியவரி" எனும் மாங்கல்யவரியையும் செலுத்தி வந்துள்ளனர்.

மேலும் குருவிடம் பாதபூசை செய்து, சஞ்சார காணிக்கையாக அவர்களால் முடிந்ததை மனமுவந்து அளித்து, அவர் சொற்படி தீட்சை மகாமந்திரம் உபதேசம் பெற்றுவந்துள்ளனர். ஒவ்வொரு ஆதீனத்திடமும் குறைந்தது 50 தலைக்கட்டுக்கான காணிக்கைக் கணக்கு ஓலைகள் உள்ளன. இவை சரித்திர ஆவணங்களாகும்.


இன்றும் குலகுருக்களை போற்றும் கோத்திரத்தார் நன்றாக பல்கிப்பெருகி உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு நிரந்தர குருபலம் உண்டு. இவற்றை சரியாக செய்யாமல் குருவுக்குக்கொடுத்த வார்த்தை தவறியவர்களே திருமணமின்மை, துன்பங்கள், குடும்பச்சிக்கல்கள், குழப்பங்கள் போன்று துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.


என்னுடைய அனுபவத்தில் குலகுருக்களை மீண்டும் கண்டு ஆசிபெற்று துன்பங்களினின்று மீண்டு வாழ்பவர்கள் ஏராளம். குலகுருவால் தீராத பிரச்சனைகளே இல்லை.
"குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி


"குருபீடம் உயர குடி உயரும்" குரு எவ்வாறு உள்ளார் என்பதனைக் கொண்டே குடிகளின் நிலையும் இருக்கும் என்பது கண்கண்ட உண்மை.


திருமந்திரத்தில் ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம் பற்றிய பதிகங்கள் மேலும் குருவின் சிறப்புகளை விவரிக்கின்றன:


கொங்கு மண்டலத்தில் சோழன் ஸ்ரீகாழி பிராமணர்களை குடியேற்றும் முன்பே கொங்கு நாட்டில் குருத்வமும் உடைய பிராமணர்களும், ஸ்தானிகர்களும் இருந்தததாக கார்மேக கவிஞர் கொங்கு மண்டல சதகத்தில் கூறியுள்ளார்.


"குலசேகரன் குலோத்துங்கன் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த்
தலபூசை நன்குறத் தன்னாடு உலாரிற் சமர்த்தர் கண்டு
நிலையான காணியும் மென்மையு மிய நிதானமுற்று
வலவாதி சைவர்கள் வாழ்வதன்றோ கொங்கு மண்டலமே"

 

ஆத்மார்த்த சிவபூஜை


ஆத்மார்த்த பூஜை என்பது சிவலிங்கத்தை இதயத்தில் வரித்து நம் ஆம்மாகவே பாவித்து உள்முகமாக நடைபெறுகின்ற வழிபாடாகும். ஆத்மார்த்த பூஜை என்பது இறைவனை உள்முகமாக தியானித்து, அர்ச்சித்து வழிபடுவதாகும். ஆலயங்களில் நடப்பது பார்த்த பூஜை எனப்படும் வெளிமுகமாக இறைவனை பூஜித்து மந்திரங்கள் சொல்லி அர்ச்சிப்பதாகும். ஆத்மார்த்த பூஜை மிகச் சிறந்த ஆன்மவலிமை தரக்கூடிய வழிபாட்டு முறையாகும். சிஷ்யர்கள் குலவம்ச நலனுக்காக குலகுருக்கள் அன்றாடம் தவறாது ஆத்மார்த்த பூஜை செய்வார்கள். இதன் மூலம், அன்றாடம் நாம் அறிந்தும் அறியாமலும் செய்கின்றன. பல பாபங்கள் சிவார்ப்பணம் செய்யப்பட்டு விமோசனம் கிட்டுகிறது. அன்றாடம் சிவப்பிரசாதம் குளம் முழுமைக்கும் குலகுரு வாயிலாக கிட்டுகிறது. இதனால்தான் வருஷமொரு முயைறேனும், நம்போருட்டு ஆத்மார்த்த பூஜை செய்யும் குலகுருவை தரிசித்து ஆசி பெறுதல் அவசியம் என்பதாகும். இந்த ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாவிட்டால் பாவங்கள் தேங்கிக் குவிந்து குலவிருத்தியை பாதிக்கும்.


மடங்களைப் பொறுத்து ஒருகால பூஜை முதல் ஆறுகால பூஜை வரை நடந்து வருகின்றன. சுமார் இரண்டு தலைமுறைகளாக சிஷ்யர்கள் தங்களை குலகுருக்களை மறந்தபோதிலும் குலகுரு மடங்களில் இன்றளவும் சிஷ்யர்கள் நலன்வேண்டி ஆத்மார்த்த பூஜைகள் நடந்த கொண்டுதான் இருக்கின்றன.


சஞ்சாரம்


மடத்தில் அன்றாட பூஜைகள் நடப்பதுமின்றி குலகுருக்கள் கிராமம் கிராமமாக சஞ்சாரம் சென்று ஒரு வாரம் தங்கியிருந்து சிவபூஜைகள், ஆத்மார்த்த பூஜைகள் செய்து, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் போன்றவை தயாரித்து பிரசாதங்கள் வழங்கி, வேத, சாஸ்திர, புராண இதிஹாசங்களின் வழியே தர்ம உபதேசங்களையும், உாிய ஆலோசனைகளையும் வழங்குவர். இதனால் சமூகத்தில் நியாயம், தர்மம், கற்புநெறி, மாதா பிதா பக்தி, சொல்வாக்கு தவறாமை, பிறரை வஞ்சிக்காமை போன்ற நற்குணங்கள் மேலோங்கியிருந்தன.


சஞ்சாரம் வரும்போது சிஷ்யர்கள் சஞ்சாரம் காணிக்கை செலுத்துவர். அக்காலத்தில் குலகுருக்கள் வண்டிகட்டி வந்திருந்து பூஜைகள் செய்ததை இன்றளவும் முதியவர்கள் தங்கள் சிறுபிராயத்தில் பார்த்ததை நினைவுகூர்ந்து சொல்வதைக் கேட்கமுடியும். ஒருமுறை சஞ்சாரம் செல்லத் துவங்கினால் மீண்டும் தம்மிடம் திரும்ப குலகுருக்களுக்கு ஒன்றிரண்டு வருஷமே ஆகிவிடும். தங்கள் குடும்பத்தை பிாிந்து கிராமம் கிராமமாக சென்று மக்கள் நலனுக்கு உபதேசங்கள் செய்ததை எண்ணிப்பார்த்தல் வேண்டும்.


சஞ்சாரம் வரும்போது நாட்டுநலன், மக்களின் நிலை, தேவை, நீராதாரங்கள், தானிய இருப்பு, விலைவாசி, சமூக மாற்றங்கள் போன்றவற்றை அனுமானித்து காலத்திற்கு தேவையான அவசியமான நடவடிக்கைகளை நிர்வாகப் பொறுப்பில் உள்ளோருக்கும், தத்தமது சிஷ்யர்களுக்கும் உபதேசிப்பர். இதனால் சமூகத்தின் ஸ்திரத்தன்மை உறுதிப்பட்டது.


வம்சாவழி கணக்கு


குலகுருக்கள் வருஷந்தோறும் சிஷ்யர்களிடம் அவர்களது வம்சாவளிக் கணக்கை குறித்து வருவர். பல மடங்களில் சிஷ்யர்களின் பலதலைமுறை முன்னோர்களின் பெயர்களைக் காணமுடியும். 1960ல் எழுதப்பட்ட கொங்கு வேளாளர் புராண வரலாறு என்னும் நூலில் அதன் ஆசிரியர் திரு.சின்னுசாமி கவுண்டர் கூறுகிறார். 'இக்காலங்களில் நாங்களும் கொங்கு வௌ்ளாளர் தான் என்று சிலர் கொங்குநாடு கவுண்டர்களிடம் பொய்யுரைத்துப் பெண் கேட்கிறார்கள். அப்படிக் கேட்பவர்களிடம் உன் குலகுரு மடமெது? வா பார்க்கலாம் என்று விசாரித்தால் அவர்கள் நிரூபிக்க இயலாது திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். இதன்மூலம் குலகுரு மட ரெக்கார்குள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அறியலாம். வௌ்ளையர் காலத்திலும் கூட குலகுரு வம்சாவளி கணக்குள் அரசாங்கத்து வழக்குகளில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணமாகக் கருதப்பட்டது.


கோயில் சீரமைப்பு


கோயில்கள் பழுதடையும்போது அதன் தொன்மை மாறாது, ஆகமங்கள் மீறாது நியமப்படி கும்பாபிஷேகக் கிரியைகளை முன்னின்று குலகுருக்களே நடத்திக் கொடுப்பார். கிராம தேவதைகளை சாந்தி செய்து திருவிழா ஏற்பாடுகளை நடத்த கிராம வாஸ்து சாந்திக்கான அழைப்பு குலகுருக்களுக்கு முறையாக விடுக்கப்படும்.


குலகுருக்களின் இவ்வாறான தர்மப்பணிகளால் மக்கள் பேராசை, ஆணவம் போன்றவற்றில் சிக்காது எளிமையாகவும், ஒழுக்கத்தோடும், இயற்கை வளங்களைக் கெடுக்காத இயற்கையோடு இணைந்த சனாதன தர்மம் சார்ந்த பாரம்பாpய வாழ்க்கை வாழ்ந்தனர். எளிமை, ஆணவமின்மையால் வீட்டு விசேஷங்களிலும், பொதுக் காரியங்களிலும் அறம் முன்னிலைப்படுத்தப்பட்டது. தேவையற்ற செலவுகளின்றி, போட்டி பொறாமையோ அரிதாகிப் போனது. மனித உறவுகளுக்குள் நல்லிணக்கமும், பண்பும்பாசமும் பெரிதாக இருந்தது. தேவைகள் நிறைவேறி மக்கள் தங்களவில் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்ததால் தேவையற்ற புரட்சிகள் இன்றி சமூகம் நிலையான ஆட்சிக்கும் வளரும் பொருளாதாரத்திற்கும் அடிகோலியது.


சமூகத்தை இத்தகைய நல்வாழ்விற்கு கண்ணுக்குத் தொியாத நரம்பு மண்டலமாக குலகுருக்கள் அரும்பெரும் பணிகள் செய்தமையால் முன்னோர்கள் குலகுருக்களை தெய்வமாக போற்றி வணங்கினர் தங்கள் உடல் பொருள் ஆவியை குருவுக்கு தத்தம் பண்ணிக் கொடுத்தனர். குலகுருவிற்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தையும், தங்கள் குளத்தில் ஏதேனும் குடும்பம் வாரிசின்றி போனால் அந்த சொத்தை மடத்திற்கு சேர்ப்பிப்பதாகவும் சாசனம் எழுதிக் கொடுத்தனர் என்றால் எந்த அளவு குலகுருக்கள் சமூகத்தின் நலத்திற்கு முக்கியமானவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.


மங்கள வாழ்த்து:


கொங்கு வௌ்ளாள கவுண்டர்கள் கல்யாணத்தில் பாடப்படும் மங்கள வாழ்த்திலும் கூட கல்யாணம் உறுதி செய்யப்படும் போது குருவுக்கு தகவல் தொியிப்பதை “வேதியன் பக்கம் விரையுடன் சென்று” என்ற வாிமூலமும் நம் கல்யாணத்தில் கைகோர்வை சடங்கின்பின் குலகுரு வேதம் சொல்லி வாழ்த்துவதை “மறையோர் வேதம் சொல்ல மற்றவர் வாழ்த்துக் கூற” போன்ற வாிகளால் அறியலாம்.