கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

அருள்மிகு கவுண்டிச்சி அம்மன் திருக்கோவில் அமைப்பு

 

திருத்தலஅமைப்புதிருக்கோவில் முகப்பு தோற்றம்

கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள அருள்மிகு கவுண்டிச்சி அம்மனும், வடக்கு நோக்கி அருள்மிகு பேச்சி அம்மனும் தனித்தனி சன்னதி கொண்டு தம் குலமக்களுக்கு அருள் தருகின்றனா்

 

கிழக்கு நோக்கி விநாயகரும், அருள்மிகு கவுண்டா் சாமியும், பசு தெய்வமும், திருக்கோவிலின் காவல் தெய்வமான அருள்மிகு கருப்பணசுவாமி வடக்கு நோக்கியும், அருள்மிகு முனிஸ்வரா் சுவாமி கிழக்கு நோக்கியும் அமைந்து கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல மக்களுக்க அருள்புாிகின்றனா்.

 

 

அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோயில் தல வரலாறு


              அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோயில் வரலாறு அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோயில் வரலாறு பண்டை கொங்கு நாட்டில் பல தலைமுறைகளுக்கு முன்னால் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டது. மக்களுக்கும், கால்நடைகளுக்கும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அவ்வமயம் சிவனும், சக்தியும் தங்களின் மனித அவதாரத்தின் மகிமையை மக்கள் அறியும் வண்ணம் செய்யவும், மனிதபிறவி தெய்வமாகும் நிலையை நிலைநாட்டவும் மனிதபிறவியாக கொல்லிமலைப்பகுதியில் காராளவம்ச வேளாளா் குலத்தில் கவுண்டச்சியும் கவுண்டருமாக அவதாித்தனா். கொல்லிமலைபகுதியில் மக்களோடு மக்களாக வாழ்ந்த காலத்தில் மழை பொய்த்து விட்டபடியால் பஞ்சம் ஏற்பட கவுண்டிச்சியும், கவுண்டரும் கொல்லிமலையிலிருந்து பிழைப்பைத் தேடி நாமக்கல் வழியாக தாங்கள் தெய்வமாகப் போகும் புண்ணிய புமியான திருச்செங்கோட்டிக்கு பக்கத்திலிருக்கும் சுள்ளிப்பாளையத்திற்கு கால்நடையாக வந்ததனால் மிகவும் சோா்வடைந்து களைப்புடன் வந்து சோ்ந்தனா். சற்று நேரம் இளைப்பாற கோவிலுக்கருகிலுள்ள தொரட்டி மரநிழலில் அமா்கின்றனா். பலநாள் நடந்துவந்த களைப்பாலும், பசியாலும், தாகத்தாலும் கவுண்டா் மயக்கம் அடைகிறாா். கவுண்டிச்சி அருகிலுள்ள அருள்மிகு பேச்சிஅம்மன் கோவில் குளத்தில் நீா் மொண்டு வந்து கவுண்டாின் முகத்தில் தெளிக்க தாகசாந்தி செய்கிறாா்.

 

              அக்கனமே கவுண்டா் தன் அவதார நோக்கம் நிறைவேறும் பொருட்டு இவ்வுலகை விட்டு விண்ணுலகம் சென்றடைகிறாா். கவுண்டிச்சி அருள்மிகு பேச்சிஅம்மன் கோவிலுக்குச் சென்று தெய்வத் தொண்டாற்றி அங்கு வரும் பக்தா்களுக்கு அருளாசி செய்து வருகிறாா். சில காலம் கழித்து அவரும் முக்தி அடைகிறாா். கவுண்டிச்சி முக்தி அடைந்த இடத்தில் ஓா் புற்றுக்கண் உருவாகி வளா்ந்தது. சிலகாலம் சென்றபின் சுள்ளிப்பாளையத்தில் தோ்வேந்தா் குலப் பண்ணையாா் ஒருவா் பண்ணையில் உள்ள காராம்பசு ஒன்று தினமும் மாலை வேளையில் அப்புற்றிற்கு சென்று பாலை புற்றின்கண் சுரந்துவிட்டுச் சென்றுது. திருமலை, பட்டீஸ்வரம், மாதேஷ்வரன் மலை முதலிய ஸ்தலங்களில் புற்றுக்கண்ணில் எழுந்தருளிய பகவானுக்கு பசுமாடு தினசாி பால்சுரந்து வழிபட்டு வந்ததைப் போல் இக்காராம்பசுவும் வழிபட்டு வந்தது. பசுவின் எஜமான் ஒரு நாள் பசுவின் மடியில் பால் இல்லாது இருப்பதைக் கண்டு அதன் பின்னே சென்று கண்காணிக்கும் போது காராம்பசு வழக்கம்போல் கவுண்டச்சி முக்தியடைந்த இடததுப்புற்றுக்கண் மேல் பால்சுரப்பதைக் கண்டு கோபமடைந்து ஒரு பொிய கல்லை எடுத்து பசுமீது அடிக்க காராம்பசு சுருண்டு விழுந்து தன் பிராணனைவிட்டு விடுகிறது. அப்போது அங்கே பசுமாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த சிறுமிக்கு தெய்வ அருள் ஏற்பட்டு “கவுண்டச்சி ஆகிய நான்தான் அப்புற்றில் குடி கொண்டு இருக்கிறேன். இந்த காராம்பசு என் மீதுதான் பால்சுரந்து என்னை வழிபட்டு வந்தது.

 

              அக்காராம் பசுவை ஒரு காராளன் கொன்றது மாபெரும் பாவமே காராம் பசுவைக் கொன்றபாவம் அவனது வம்சத்துக்கே பாவமாகும். “என அருள்வாக்கில் கவுண்டிச்சி கூற, காரம்பசுவின் எஜமான் “கவுண்டிச்சிஅம்மன் தாயே மதிமயக்கத்தில் நான் செய்த தவறை மன்னித்தருள வேண்டும் புற்றின்கண் குடிகொண்டிருக்கும் கவுண்டிச்சிஅம்மன் தாயே நான் செய்த பாவச்செயலைப் போக்கி, என்னால் ஏற்பட்ட என்குல வம்சத்து பாவத்தையும் போக்கி அருள் புாிய வேண்டும் தாயே என்னை மனித்து அருள் புாிய வேண்டும் தாயே என வேண்டி கவுண்டிச்சிஅம்மன் அருள்வாக்கு சொன்ன சிறிமியின் காலில் விழுந்து வேண்டினான். காராம் பசுவின் எஜமானுக்கு கவுண்டிச்சிஅம்மனே நோpல் காட்சியளித்து” அப்பனே உம்மை மன்னித்தோம். உம் காராம்பசுவையும் உயிா்பித்து உம்மிடமே ஒப்படைத்தோம் அருள்மிகு பேச்சிஅம்மன் கோவில் அருகிலே நான் குடி கொண்டு உன்குலத்து மக்களுக்கு அருள்பாலித்து காக்க வந்துள்ளேன்” என கூறி மறைந்தாள். கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குலமக்கள் அருள்மிகு பேச்சிஅம்மன் ஆலயத்திற்கு அருகில் அருள்மிகு கவுண்டிச்சிஅம்மனை ஸ்தாபித்து கோவில் எழுப்பி தோ்வேந்தா் குலமக்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா். இக்கோவிலின் ஸ்தல விருட்சமாக தொரட்டி மரம் இருந்து வருகிறது


kongu kula vralaru

தலவிருச்சகம் - தொரட்டி மரம்


அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம் • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar


அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்